Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

22 ஆண்டுகளுக்கு பிறகு… ஆஸ்திரேலிய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி பாகிஸ்தான் சாதனை!

04:44 PM Nov 10, 2024 IST | Web Editor
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில், தொடரின் 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சீன் அபாட் 30 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையும் படியுங்கள் : முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பை உத்தவ் தாக்கரே தனது சகோதரர் என குறிப்பிட்டாரா? அவர் பேசியது என்ன?

பின்னர் 141 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 26.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சலீம் அயூப் 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் லான்ஸ மோரீஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு கடைசியாக 2002ல் ஆஸ்திரேலியாவில் நடந்த இருதரப்பு ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
australisAUSvsPAKNews7Tamilnews7TamilUpdatespakistanPAKvsAUS
Advertisement
Next Article