Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆஸ்திரேலிய ஓப்பன்: 43 வயதில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவின் ரோகன் போபண்ணா அசத்தல்...!

09:58 PM Jan 27, 2024 IST | Jeni
Advertisement

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி இத்தாலி ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

Advertisement

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் இறுதி சுற்றில் ரோகன் போபண்ணா (இந்தியா) - மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி, இத்தாலியின் சிமோன் போலெலி - ஆன்ரீயா வவாசோரி இணையை சந்தித்தது.

1 மணி நேரம் 39 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 7-6, (7-0), 7-5 என்ற செட்களில் மோன் போலெலி - ஆன்ரீயா வவாசோரி ஜோடியை வீழ்த்தி ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் இணை சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியின் மூலம் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோகன் போபண்ணா படைத்துள்ளார். அவர் 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

சபலென்கா இதற்கு முன்பாக 40 வயதில் பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் இரட்டையர் சுற்றில் பட்டம் வென்ற நெதர்லாந்து வீரர் ஜீன் - ஜுலியன் ரோஜர் என்ற வீரரே அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமை பெற்றிருந்தார். தற்போது, அந்த சாதனையை முறியடித்து ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 43 வயதான ரோகன் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Advertisement
Next Article