Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் - முதல் போட்டி அப்டேட்!

இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
07:06 AM Jul 20, 2025 IST | Web Editor
இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
Advertisement

 

Advertisement

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில் டந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி விளையாடும் முதல் டி20 போட்டி இது

இதில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஆடும் முதல் டி20 இது.

வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட் தொடரின் தோல்விக்குப் பிறகு இந்த டி20 தொடரில் கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் கேப்டனாக ஷாய் ஹோப் உள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான தங்கள் அணியைத் தயார்படுத்த இந்தத் தொடரைப் பயன்படுத்திக்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags :
#WestIndiesAustralianausvswiCricketcricketnewsSabinaParkT20
Advertisement
Next Article