Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆஸ்திரேலியா Vs வெஸ்ட் இண்டீஸ் 2வது டி20 போட்டி - 5வது முறையாக சதம் அடித்த மேக்ஸ்வெல்!

05:47 PM Feb 11, 2024 IST | Web Editor
Advertisement

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் 5வது முறையாக மேக்ஸ்வெல் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : டெல்லியை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு - பாதுகாப்பை பலப்படுத்த போலீஸார் தீவிரம்!

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்களுடன் 120 ரன்கள் குவித்து அசத்தினார்.


இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 242 ரன்கள் என்ற மிக பெரிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 120 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் இருந்தார்.

Tags :
5th centuryAustraliaausvswiCenturyCricketMaxwellT20west indies
Advertisement
Next Article