அரையிறுதியில் ஆஸி. ஆல் அவுட் - இந்தியாவுக்கு 265ரன்கள் இலக்கு!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் ஆஸி. அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 264ரன்கள் எடுத்தது
06:07 PM Mar 04, 2025 IST
|
Web Editor
11 லீக் போட்டிகள் முடிவு பெற்ற நிலையில் 8 அணிகளிலிருந்து ‘இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா’ அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. இதில் 44ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தலான வெற்றி பெற்றது. தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி அபாரமாக விளையாடி 5விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து கேப்டன் ஸ்மித் உடன் கைகோர்த்த ஹெட் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து 39ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் ஸ்மித் அடித்தும் , நிதானமாகவும் விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். இதனைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்தனர். இதனைத் தொடர்ந்து 73ரன்களில் ஸ்மித்தும், 61ரன்களில் கேரியும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனை அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா அணி 9விக்கெட்கள் இழப்பிற்கு 264ரன்கள் குவித்தது. இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்களையும் , ஜடேஜா மற்றும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டையும் அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கு 265ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement
2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.
Advertisement
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அரையிறுதி போட்டி துபாயில் உள்ள இண்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் விளையாட ஆரம்பித்தபோதே முதல் ஓவரில் முகமது ஷமியின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து கூப்பர் டக் அவுட் ஆனார்.
இதனைத் தொடர்ந்து கேப்டன் ஸ்மித் உடன் கைகோர்த்த ஹெட் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து 39ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் ஸ்மித் அடித்தும் , நிதானமாகவும் விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். இதனைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்தனர். இதனைத் தொடர்ந்து 73ரன்களில் ஸ்மித்தும், 61ரன்களில் கேரியும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனை அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Next Article