ஆஸி. அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி - ரிங்குசிங்கின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா த்ரில் வெற்றி.!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியுடன் உள்ள கிரிக்கெட் தொடருக்கு சூர்ய குமார் யாதவ் தலைமையில் டி20 அணியை அறிவித்தது இந்திய அணி. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை பெற்றது.
இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. 2-ஆவது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது. 8 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் அடித்திருந்த ஸ்மித் 16-ஆவது ஓவரில் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அனைத்து ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 208 ரன்களை குவித்தது.
இஷான் - சூர்யகுமார் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தது. இதில் இஷான் 39 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். தன்வீர் சங்கா வீசிய 13-ஆவது ஓவரில் மேத்யூ ஷார்ட்டிடம் அவர் கேட்ச் கொடுத்தார்.
பின்னர் ஆட வந்த அக்ஸர் படேல் 2 ரன்களுக்கு, ஷான் அப்பாட் வீசிய கடைசி ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ரன் அவுட் ஆகினர். கடைசி பந்தில் 1 ரன் தேவையிருக்க, அதை ரிங்கு சிங் சிக்ஸராக விளாசினாலும், அது 'நோ பால்' (1 ரன்) ஆனது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.