Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

AUS vs IND | கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!

08:37 AM Dec 16, 2024 IST | Web Editor
Advertisement

கிரிக்கெட் வீரர் பும்ரா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார்.

Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிப் பெற்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 2வது நாள் ஆட்டம் நேற்று (டிச.15) நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது. இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 152 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். மேலும், அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும், ஸ்டார்க் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த தொடரின் 3ம் நாள் ஆட்டம் இன்று (டிச.16) நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார். பும்ரா டெஸ்ட் இன்னிங்சில் அவர் 5 விக்கெட் எடுப்பது இது 12வது முறையாகும். அதே சமயம் அவர் ஆசிய கண்டத்துக்கு வெளியே இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 10வது நிகழ்வாகும். இதற்கு முன்பு இந்திய பவுலர்களில் கபில்தேவ், ஆசியாவுக்கு வெளியே 9 முறை 5 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

Advertisement
Next Article