Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு! உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிப்பு!

03:37 PM Jul 08, 2024 IST | Web Editor
Advertisement

உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட நாள்தோறும்
தமிழ்நாடு மட்டும் இல்லாமல், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில், இருந்து
சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் சார்பில் கோடை சீசனுக்கு சிறப்பு மலை
ரயில்கள் இயக்கப்பட்டது. இந்நிலையில் ஊட்டி - மேட்டுப்பாளையம், ஊட்டி - கேத்தி இடையே கடந்த மார்ச் 29-ம் தேதியிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை ஜூலை 1 ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதையும் படியுங்கள் : அசாம் வெள்ளம்: "விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும்” - ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தல்!

இந்நிலையில் தற்போது வரை நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், சிறப்பு ரயில்களின் சேவை ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags :
Augustextendedootyservicespecial mountain trainTouristsUtagai
Advertisement
Next Article