Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாணவர்கள் கவனத்திற்கு! - தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுதேர்வில் புதிய மாற்றம்!

10:51 AM Feb 16, 2024 IST | Web Editor
Advertisement

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement

2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்து பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  அதில்,  தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கருதாமல் மூன்றாவது மொழியை எடுத்து படித்து வருகின்றனர். முன்னதாக,  பொதுத் தேர்வில் மூன்றாவதாக எடுக்கும் விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் இல்லாமல் இருந்தது.

இதையும் படியுங்கள் : தேர்தல் பத்திர முறை – அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு தெரியுமா.?

இந்நிலையில்,  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து மூன்றாவதாக எடுக்கப்படும் விருப்பப் பாடத்திலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  மேலும், 5 பாடங்களை தாண்டி 6 ஆவது பாடமாக விருப்பப்பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்கள் பொதுத்தேர்வில் அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்,  ஆங்கிலம்,  கணிதம்,  அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை பயிலும் மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதினால் போதும்.  ஆனால், விருப்ப பாடமாக மலையாளம்,  உருது,  தெலுங்கு,  கன்னடம் உள்ளிட்ட பாடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும்.  விருப்ப பாடத்திலும் குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெறுவது கட்டாயம்.  இது 2024 - 25 கல்வி ஆண்டில்  நடைமுறைக்கு வரும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags :
EducationDepartmentPublicExamsTamilNaduGovtTamilnaduSchoolsTNGovtTNschoolEducationDepartmentTNSchools
Advertisement
Next Article