Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TrainCancelled | பயணிகள் கவனத்திற்கு... சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை நாளை ரத்து!

01:06 PM Nov 16, 2024 IST | Web Editor
Advertisement

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

சென்னையை பொறுத்தவரை மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து அமைந்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்ட பல காரணங்களை கருத்திற்கொண்டு மக்கள் அதிகமாக பயன்படுத்துவது மின்சார ரயில்கள் தான். அன்றாட பணி மற்றும் பல்வேறு பணிகளுக்காக சென்னை வருபவர்களுக்கு குறைந்த செலவில், விரைவாக செல்ல இந்த வசதி பெரிதும் பயன்படுகிறது. இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (நவ.17) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : Sabarimala | பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் இலவச Wifi வசதி தொடக்கம்!

அதன்படி நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நேரத்தில் பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6.15 மணி முதல் மாலை 5.05 மணி வரை 20 முதல் 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை மாலை 5 மணிக்குப் பிறகு மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article