Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம்!

சபரிமலை சீசனை முன்னிட்டு மகாராஷ்டிரா - கொல்லம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது.
08:22 AM Nov 09, 2025 IST | Web Editor
சபரிமலை சீசனை முன்னிட்டு மகாராஷ்டிரா - கொல்லம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது.
Advertisement

கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது வழக்கம். இந்த நிலையில், சபரிமலை சீசனை முன்னிட்டு கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை மகாராஷ்டிரா மாநிலம் H.S.நாந்தேட் ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தில் உள்ள தென்காசி வழியாக கொல்லத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Advertisement

அதன்படி, இந்த சிறப்பு ரயிலானது H.S. நாந்தேட் - கொல்லம் இடையே வருகின்ற 20, 27 மற்றும் டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 1,8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அதேபோல், மறு மார்க்கமாக கொல்லம் - H.S. நாந்தேட் இடையே வருகின்ற 22, 29 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதம் 6, 13, 20, 27 மற்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3, 10, 17 ஆகிய தேதிகளில் இரு மார்க்கமாகவும் 9 முறை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Ayyappa devoteessouthern railwayspecial trainsTamilNaduTenkasi
Advertisement
Next Article