"தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
04:41 PM Oct 06, 2025 IST
|
Web Editor
Advertisement
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " ஜனநாயகத்தின் மிக உயரியதான நீதித்துறை மீதான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல். தலைமை நீதிபதி கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம் அந்த நிறுவனத்தின் வலிமையைக் காட்டுகிறது, ஆனால் அது சம்பவத்தை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
Advertisement
தாக்குதல் முயற்சிக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பெருந்தன்மையுடன் பதிலளித்தது அவரது நீதித்துறையின் பலத்தை காட்டுகிறது. நமது அமைப்புகளை மதிக்கும், பாதுகாக்கும் முதிர்ச்சியான நடத்தை உள்ள கலாசாரத்தை வளர்க்க வேண்டும்". அதில் பதிவிட்டுள்ளார்.
Next Article