Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்ற தாக்குதல் | “மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்

05:08 PM Dec 13, 2023 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார். 

Advertisement

பார்வையாளர் மாடத்திலிருந்து மக்களவைக்குள் குதித்த அந்த நபர்கள், கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசினர்.  அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது. அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதை தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் இதுகுறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில்,  இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்தது மிகவும் தீவிரமான பிரச்னை.  இது வெறும் மக்களவை,  மாநிலங்களவை பற்றியது அல்ல,  இவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்படி இருவர் உள்ளே நுழைந்து பாதுகாப்பு மீறலை ஏற்படுத்த முடிந்தது என்பது பற்றியது. அவையை ஒத்திவைக்கக் கேட்டுக்கொள்கிறோம்.  மத்திய உள்துறை அமைச்சர் வந்து இதுகுறித்து விளக்கம் தர வேண்டும்' என்று பேசினார்.

Advertisement
Next Article