Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தெறி ஹிந்தி ரீமேக் | வெளியான புது அப்டேட்!

02:08 PM Jan 14, 2024 IST | Web Editor
Advertisement

 ‘ஏ ஃபார் ஆப்பிள்’  நிறுவனத்தின் தயாரிப்பில், காளீஸ் இயக்கத்தில் உருவாகும் வருண் தாவானின் 18 வது படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Advertisement

தமிழ் திரையுலகில், தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துவரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் அட்லீ.  இவர் இயக்குனர் ஷங்கரிடம் , நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து விட்டு, ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அதன்பின், நடிகர் விஜய்யுடன் இணைந்து மூன்று தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார்.  பிகில் திரைப்படமானது, 300 கோடியைத் தாண்டியதாக தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அறிவித்தது. விஜய் நடித்து வசூலில் 300 கோடியைத் தாண்டிய முதல் படமாகவும் இந்தப் படம் அமைந்தது.

பிகில் படம் தயாரித்துக் கொண்டிருந்தபோதே, அட்லீ தனது அடுத்த படத்தில் ஷாருக்கானை வைத்து இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அட்லீயை பொறுத்தவரை, அவர் இயக்கும் ஐந்தாவது படம்தான் ஜவான். இருந்தபோதும் ஜவான் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் துணிந்து 300 கோடி ரூபாயை முதலீடு செய்தது.

தற்போது ஜாவான் ரூ.1140 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து, 3000 கோடி வசூல் செய்யும் படத்தினை இயக்க உள்ளதாக அட்லீ அறிவித்துள்ளார். இத்திரைப்படத்தை நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து இயக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ஹிந்தியில் தெறி படத்தின் ரீமேக்கை தயாரித்து வருகிறார். வருண் தவான் நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நாயகிகளாக நடிக்க உள்ளனர். இப்படத்தை காளிஸ் இயக்குகிறார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
atleeCinema updatesKaleesKeerthy SureshNews7Tamilnews7TamilUpdatesVarun DhawanVD18Wamiqa Gabbi
Advertisement
Next Article