‘பராசக்தி’ படத்திற்கான டப்பிங் பணிகளை துவங்கிய அதர்வா..!
இறுதி சுற்று, சூரரை போற்று ஆகிய படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் திரைப்படம் பராசக்தி. இப்ப்டத்தில் சிவாகார்த்திகேயன்,ரவிமோகன், அதர்வா ஆகியோர் முக்க கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் நடிகை ஸ்ரீ லீலா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. அதே நேரத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜயின் கடைசி படமான ஜன நாயகன் படக்குழுவும் பொங்கல் வெளியீடு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதல் பாடலாக சமீபத்தில் வெளியான ’நெஞ்சாங்குழி’ பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக பராசக்தி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ரவி மோகன் தன் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் அதர்வா பராசக்தி படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.