#Thalapathy69 -ல் இணைந்த 'அசுரன்' பட நடிகர்!
தளபதி 69 இல் டீஜே அருணாசலம் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்து வருகின்றனர்.மேலும் இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
தளபதி69 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 69 இல் டீஜே அருணாசலம் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் இப்படத்தில் மமிதா பைஜுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.