Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் #SupremeCourt-ல் மேல்முறையீடு!

06:26 PM Aug 27, 2024 IST | Web Editor
Advertisement

சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Advertisement

கடந்த 2006-2011-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக 44 லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2012-ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

எனவே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்று அவர்களை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து மேற்கண்ட உத்தரவை எதிர்த்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யாததால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து இரு அமைச்சர்களையும் விடுவித்த உத்தரவை ரத்து செய்ததோடு, வழக்கில் விடுவிக்க வேண்டும் என்ற மனுவையும் தள்ளுபடி செய்து கடந்த ஆக.7-ம் தேதி உத்தரவிட்டார். அதேபோல இந்த வழக்கு 2011-ம் ஆண்டு தொடர்பானது என்பதால் ’தினந்தோறும் விசாரணை’ என்ற அடிப்படையில் நடத்தி விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி கோரிக்கை வைத்துள்ளார்.

Tags :
DMKDMK GovtKKSSRMadras High CourtNews7Tamilnews7TamilUpdatesRamachandranSCISupreme Court of indiaThangam thennarasuTN Govt
Advertisement
Next Article