Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சட்டசபை கூட்டத்தொடர் - மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
10:49 AM Mar 17, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து ஒவ்வொரு துறையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வாசித்தார்.

Advertisement

இதைத் தொடர்ந்து 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் கடந்த மார்ச் 15-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வாசித்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு சட்டசபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

அப்போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, குணசீலன் மற்றும் மருத்துவர் செரியன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும், சபாநாயகர் மீது அதிமுக சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் விவாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :
2025BudgetAssembly SessionBudgetcondolencesformer MLAsTNAssembly
Advertisement
Next Article