சுக்தேவ் சிங் படுகொலை | குற்றவாளிகள் யார்? காவல்துறை அதிர்ச்சித் தகவல்...
பஞ்சாப்பைச் சேர்ந்த பிரபல ரௌடி லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்தவர்கள் சுக்தேவ் சிங்கை கொலை செய்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றனர்.
ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை ஜெய்ப்பூரில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடியின் கொலையில் அரசியல் மந்தநிலை தொடங்கியது.
இக்கொலை தொடர்பாக கர்னி சேனா புதன்கிழமை ராஜஸ்தான் பந்த் அழைப்பு விடுத்துள்ள நிலையில், மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போகும் பாஜக, மாநிலத்தை இழந்த பிறகு காங்கிரஸின் "பழிவாங்கும் திட்டம்" என்று கூறியது.
சுக்தேவ் வீட்டுக்கு அவரை சந்திக்க வேண்டும் எனக் கூறி 3 பேர் பைக்கில் வந்துள்ளனர். சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே அழைத்து சென்றுள்ளனர். சுக்தேவ் சிங்குடன் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்த அவர்கள் திடீரென சுக்தேவ் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதில் குண்டுகள் பாய்ந்து சுக்தேவ் உயிரிழந்தார்.
உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில் கொலையாளிகளில் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அனைத்தும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர் ஒருவரும் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார்.
டிசம்பர் 3 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது, கர்னி சேனாவை புறக்கணித்ததால் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது என சுக்தேவ் சிங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், பஞ்சாப்பைச் சேர்ந்த பிரபல ரௌடி லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்தவர்கள் சுக்தேவ் சிங்கை கொலை செய்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றனர்.