Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர் மழை | அசாமில் வெள்ள அபாயம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

08:01 AM Jul 02, 2024 IST | Web Editor
Advertisement

அசாமில் வெள்ள நிலவரம் அபாய கட்டத்தை எட்டிய நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சா்மா தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. அருணாச்சல பிரதேசம், அசாம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், அசாமில் வெள்ள நிலவரம் அபாய கட்டத்தை எட்டிய நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சா்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய அவா், "பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீா் பாய்ந்து வருகிறது. மேலும், அடுத்த மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது. எனவே, அவசரநிலையைச் சமாளிக்க ராணுவம் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படைகள் தயாா் நிலையில் உள்ளன" என்றாா்.

தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சா்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "மாநிலத்தில் வெள்ள நிலைமை குறித்து விசாரிப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி என்னிடம் தொலைபேசியில் பேசினாா். அருணாசலப் பிரதேசத்திலும் அசாமிலும் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த ஆண்டில் இரண்டாவது வெள்ள பாதிப்புகளை மாநிலம் எதிா்கொண்டு வருவது குறித்து அவரிடம் விளக்கினேன். இந்த நேரத்தில் மத்திய அரசு முழுவதுமான ஒத்துழைப்பை வழங்கும் என்று அவா் என்னிடம் உறுதியளித்தாா்" என்று பதிவிட்டிருந்தார்.

Tags :
assamFloodHimanta Biswa SarmaNarendra modiPMO Indiarainfall
Advertisement
Next Article