Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Asian Champions Trophy Hockey | இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொள்ளும் இந்திய அணி!

06:56 PM Sep 16, 2024 IST | Web Editor
Advertisement

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சீன அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது.

Advertisement

8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டி 1 -1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க போட்டி பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது. அதில் 2-0 என்ற கணக்கில் சீனா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பின்னர் நடந்த 2வது அரையிறுதி போட்டியில் தென்கொரிய அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டியில் 4 - 1 என்ற கோல்கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது. இந்தியா சீனாவிற்கு இடையேயான போட்டி என்பதால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

Tags :
ActchinaFinalsHarmanpreetHulunbuirIndiaNews7TamilSouth Korea
Advertisement
Next Article