Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட் | UAE அணிக்கு எதிரான போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

08:39 PM Jul 21, 2024 IST | Web Editor
Advertisement

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் UAE அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபாரே வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஏராளமான தொடர்களை சர்வேதேச கிரிக்கெட் கவுசில் நடத்தி வரும் நிலையில் 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் கடந்த 19 ஆம் தேதி சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய – UAE அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற UAE அணி முதலில் பந்துவீசிவதாக அறிவித்தது . இதையடுத்து UAE அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

ஆரம்பம் முதலில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது . இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் UAE பேட்டிங் செய்தது.

இந்திய அணி கொடுத்த கடின இலக்கை பொறுப்புடன் கையாண்டு வந்த UAE அணி குறைந்த இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த UAE அணி 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன்மூலம் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

Tags :
ind vs uaeWomen's Asia Cup
Advertisement
Next Article