ஆசிய கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. குரூப் பிரிவு ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில் சூப்பா் 4 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் நேற்று துபாயில் நடந்தது. அதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்ற இந்தியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஆட்டத்தின் இறுதியில், இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.