Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”தேர்தல் நெருங்கும் நிலையில் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும்” - தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என மத்திய உள்துறை அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.
07:02 PM Sep 03, 2025 IST | Web Editor
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என மத்திய உள்துறை அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.
Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன்,  பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், உள்ளிட்ட முக்கிய தலவர்களி கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது, மற்றும் உள்கட்சி பூசல்களை களைவது  உள்ளிட்டவை குறித்து தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா ஆலோசனை வழங்கினார். அண்மை காலங்களில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளிடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகளும் உட்கட்சி பூசல்களும் அதிகரித்து வருவது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும் தேர்தல் நெருங்கி வருவதால் இதுபோன்ற விவகாரங்களை தவிர்ப்பது மிக மிக அவசியம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்வில்லை.  திருமண நிகழ்வுகள் மற்றும் அதிக வேலைகள் இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Tags :
amithshalatestNewsTNBJPTNnews
Advertisement
Next Article