Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜாமீனை நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு! - உச்சநீதிமன்றம் நிராகரிப்பு!

01:19 PM May 28, 2024 IST | Web Editor
Advertisement

ஜாமீனை நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

Advertisement

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதனிடையே, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த உச்சநீதிமன்றம்,  தேர்தல் பரப்புரைக்காக ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கியது. மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : "பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரப் பார்க்கிறார்" - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு!

இந்நிலையில் அதனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு உச்சநீதிமன்ற கோடைவிடுமுறை கால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில்,  இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற விடுமுறை கால நீதிபதிகள் அமர்வு,  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு குறித்து தலைமை நீதிபதிகள் அமர்வு முடிவு செய்வார்கள் என்றும்,  இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.   இதையடுத்து, இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரிய கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Tags :
#ArvindKejriwalAAPDelhiExcisePolicyInterimBailSupremeCourt
Advertisement
Next Article