Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இனிப்பு சாப்பிட்டதாக அமலாக்கத்துறை முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு மறுப்பு!

10:01 PM Apr 18, 2024 IST | Web Editor
Advertisement

இனிப்பு சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலம் பிணை வாங்க முயற்சிப்பதாக அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் மறுத்துள்ளார்.

Advertisement

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  கெஜ்ரிவால் தரப்பிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில்,  தேர்தல் நடைபெறும் சமயத்தில் அமலாக்கத் துறையினர் கைது செய்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படியுங்கள் : மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு… வாக்குப்பதிவை முன்னிட்டு மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!

இந்த வழக்கு மீது நடந்த முதல் விசாரணையின் போது ஒத்திவைக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த ஏப். 9 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பளித்தது. 

இதனையடுத்து கடந்த ஏப். 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.  இந்த மனு கடந்த 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.  இந்த விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் அவரது காவலை ஏப். 23 ஆம் தேதி நீட்டித்துள்ளது.  இந்நிலையில், தனது சர்க்கரை அளவை தொடர்ந்து சோதிக்கவும்,  குடும்ப மருத்துவரிடம் காணொலியில் உரையாடவும் அனுமதி கோரி மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்தார்.  இந்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா விசாரித்தார்.

விசாரணையின் போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சோயிப் ஹுசைன்,  “நீரிழிவு அதிகமாக இருப்பதால் வீட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டதாாக மருத்துவ காரணங்களை காட்டி ஜாமீன் பெற வசதியாக அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகளை உண்கிறார்” என வாதிட்டார்.

இதற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விவேக் ஜெயின் ஆட்சேபம் தெரிவித்துடன்,  “ஊடக வெளிச்சம் பெற அமலாக்கத் துறை இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாாகவும்,  தற்போது இந்த மனுவை திரும்ப பெற்று,  திருத்தம் செய்து தாக்கல் செய்வதாகவும்” தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து,  கெஜ்ரிவாலுக்கு திஹார் சிறையில் அளிக்கப்படும் உணவு குறித்த விவரங்களை தாக்கல் செய்ய கோரி சிறை நிர்வாகத்துக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு, இந்த வழக்கை விசாரணை நாளைக்கு ஓத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலாக்கத் துறை அளித்த குற்றச்சாட்டை, திகார் சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தார்.

Tags :
#ArvindKejriwalAAPDelhiLiquorPolicyEnforcementDirectoratesummonSupremeCourt
Advertisement
Next Article