Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இடைக்கால ஜாமின் முடிந்தது - திகார் சிறைக்கு திரும்பினார் அரவிந்த் கெஜ்ரிவால்!

06:45 PM Jun 02, 2024 IST | Web Editor
Advertisement

இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில், மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

Advertisement

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். இதையடுத்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமின் கோரி அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த உச்சநீதிமன்றம்,  தேர்தல் பரப்புரைக்காக ஜூன் 1  வரை இடைக்கால ஜாமின் வழங்கியது. மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படியும் உத்தரவிட்டது.  இதனையடுத்து இந்த ஜாமினை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.  இந்த ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இதையும் படியுங்கள்: உ.பி.யில் திடீர் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு!

முன்னதாக டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கோரி  மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு ஜூன் 1ம் தேதி விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.  

இடைக்கால ஜாமின் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மீண்டும் திகார் சிறைக்கு சென்றார். முன்னதாக அவர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் கனாட் பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் பிரார்த்தனை நடத்தினார்.  அதன் பிறகு தனது கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்று தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்தார்.

Tags :
Aam admi partyAAPAravind kejriwalDelhi CMDelhi Liquor PolicyTihar Jail
Advertisement
Next Article