Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்ரமுடன் மோதும் அருண் விஜய் - ஒரே நாளில் ரிலீஸாகும் தங்கலான், வணங்கான்?

02:15 PM Jun 18, 2024 IST | Web Editor
Advertisement

விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படமும், அருண்விஜயின் வணங்கான் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’.  இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

அதில், இடம்பெற்ற விக்ரமின் தோற்றமும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த திரைப்படம் ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகியது.  இந்த நிலையில், பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் திரைப்படமும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இப்படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும்,  சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Tags :
Arun VijayBalaPa. RanjiththangalaanVanangaan
Advertisement
Next Article