செயற்கை இனிப்பூட்டிகளால் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பா? ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
தேநீர், காபியில் செயற்கை இனிப்பூட்டிகளை சேர்த்துக் கொள்வதால் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னை சர்க்கரை நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை, சமீபத்தில் 179 டைப்-2 வகை சர்க்கரை நோயாளிகளை வைத்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டது. இது தொடர்பாக எம்டிஆர்எஃப் தலைவரும், சர்க்கரை நோய் முதுநிலை மருத்துவ நிபுணருமான வி.மோகன் கூறியதாவது:
“சர்க்கரை நோயாளிகளின் பயன்பாட்டுக்காக பல வகையான செயற்கை இனிப்பூட்டிகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் கலோரி நிறைந்த இனிப்பூட்டிகள் தீங்கு விளைவிப்பவை. அதேவேளையில், சுக்ராலோஸ் எனப்படும் சர்க்கரையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சேர்மம் மூலமாக உருவாக்கப்படும் இனிப்பூட்டிகள் அனைவருக்கும் உகந்ததாக உள்ளது.
இருந்த போதிலும், இத்தகைய இனிப்பூட்டிகளால் உடல் பருமன் அதிகரிக்கலாம். இதய பாதிப்புகள் ஏற்படலாம். பல்வேறு உடல் நல பிரச்னைகள் உருவாகலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. ஆனால், அதனை உறுதிசெய்ய இதுவரை உலக அளவில் எந்த ஆதாரப்பூர்வ ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான் டைப்-2 சர்க்கரை நோயாளிகள் 179 பேரைக் கொண்டு அந்த ஆய்வை முன்னெடுக்க நாங்கள் முடிவு செய்தோம்.
அதேபோன்று இடுப்பு சுற்றளவு, உடல் பருமன், உடல் நிறை அளவு (பிஎம்ஐ) ஆகியவையும் கணிசமாக குறைந்திருந்தன. உடலில் கொழுப்புச் சத்தும் சற்று குறைந்திருந்தது. இவை அனைத்துமே இதய ரத்த நாளங்களை பாதுகாக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.