Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை?

04:26 PM May 01, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்சி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. கடந்த ஏப். 14-ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பைக்கில் வந்த மர்ம நபர்கள் 3 ரவுண்ட் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டறிந்த போலீஸார்,  சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். அதன்படி, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக விக்கி குப்தா (24), சாகர் பால் (21) என்ற இரு இளைஞர்களை மும்பை காவல் துறை கைது செய்தது. தொடர்ந்து இந்த இருவருக்கும் துப்பாக்கிகளை வழங்கியதாக அனுஜ் தபன், சோனு சுபாஷ் சந்தர் என்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அனுஜ் தபன் சிறையிலேயே தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும்,  உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  அவர் தற்கொலை செய்து கொண்டது எப்படி? தற்கொலைக்கு தூண்டியது யார்? உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
BandrabollywoodMumbaiNews7Tamilnews7TamilUpdatessalman khan
Advertisement
Next Article