Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாபா ராம்தேவ்க்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு!

போலி விளம்பர வழக்கில் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
04:08 PM Jan 20, 2025 IST | Web Editor
Advertisement

தவறான தகவல் கொண்ட விளம்பரங்கள் வெளியிடப்பட்ட வழக்கில், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் மற்றும் இணை நிறுவனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், பிடிவாரண்ட் பிறப்பித்து பாலக்காடு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதஞ்சலி ஆயுர்வேதத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசியால் வெளியிடப்பட்ட விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் மந்திர பரிகாரங்கள் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம், 1954 இன் விதிகளை மீறியதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டு, நோய்களைக் குணப்படுத்தும் ஆதாரமற்ற கூற்றுகளை திவ்யா பார்மசி வெளியிட்டதாக கேரளா முழுவதும் பல கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கோழிக்கோடு நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

பதஞ்சலி ஆயுர்வேத விளம்பரங்களுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) மனு தாக்கல் செய்தபோது, இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து பதஞ்சலி நிறுவன விளம்பரங்களுக்கு இடைக்கால தடைவிதித்து, நிறுவனர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸும் உச்ச நீதிமன்றம் அனுப்பியது.

இதனையடுத்து இதுதொடர்பான வழக்கில் ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டதையடுத்து, பத்திரிகைகளில் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆகஸ்ட் 2024-ல் இந்த அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

Tags :
arrest warrantbaba ramdevKerala CourtMisleading AdsPatanjali
Advertisement
Next Article