Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு!

06:58 AM Nov 20, 2024 IST | Web Editor
Advertisement

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

Advertisement

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு இடையே 1995 ஜனவரி 6 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கதிஜா மற்றும் ரஹீமா என 2 மகன்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

இதையும் படியுங்கள் : “ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு” – சௌரவ் கங்குலி கருத்து!

இருவரும் ஏராளமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டு சிறந்த ஜோடிகள் என்ற பாராட்டை பெற்றிருந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானுவின் இந்த விவாகரத்து முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ARRahmanDivorceSairaBanuSeperated
Advertisement
Next Article