Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Armstrong கொலைவழக்கு: பிரபல ரவுடி சம்போ செந்திலுக்கு #LookOut நோட்டீஸ்!

03:28 PM Aug 21, 2024 IST | Web Editor
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்திலுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

திருவொற்றியூரை சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் கார்த்திக் என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக பிரபல ரவுடி மாயாவி, சம்போ செந்தில், வழக்கறிஞர்கள் சரவணன், மொட்டை கிருஷ்ணன், இலியாஸ், சிவகுருநாதன் ரவுடி கும்பலை சேர்ந்த ஈசா, எலி யுவராஜ், சிட்டிசன் அருண், எண்ணூர் முனுசாமி வசந்த், தமிழ், மாலி சரவணன் ஆகிய 13 பேர் மீது மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல், ஆபாசமாக பேசுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கடந்த ஜூலை மாதம் புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் வெளிநாடு தப்பி சென்று விட்டார் என கூறப்படுகிறது. சம்பவம் செந்திலுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் மொட்டை கிருஷ்ணனை பிடித்தால், ஆம்ஸ்ட்ராங் கொலை சதித்திட்டம், சம்பவம் செந்தில் இருப்பிடம் தொடர்பாக பல்வேறு பயனுள்ள தகவல்கள் கிடைக்கும் என போலீசார் கருதுகின்றனர்.

மொட்டை கிருஷ்ணனின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, அவர் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் சென்னை அடையார் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக ஹோட்டல் பொதுமேலாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்னர் அடையாறு பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளுக்கும் மொட்டை கிருஷ்ணன் சென்று இருப்பது தெரிய வந்தது. சம்பவம் செந்திலை பொறுத்தமட்டில் லாட்ஜ்களில் தங்கும் பழக்கம் அவருக்கு கிடையாது. பெரும்பாலும் கூட்டாளிகளின் ஏற்பாட்டில் வீடுகளில் தங்குவார். தவிர்க்க முடியாதபட்சத்தில் மட்டுமே, வேறு யார் பெயரிலாவது புக்கிங் செய்த சர்வீஸ் அபார்ட்மெண்டுகளில் தங்குவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடையாறு பகுதியில் மொட்டை கிருஷ்ணன் சென்று வந்ததாக கூறப்படும் சில வீடுகள், சர்வீஸ் அபார்ட்மெண்டுகளில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அங்கிருந்தவர்களிடம் சம்பவம் செந்திலின் போட்டோவை காட்டி, இந்த நபரை பார்த்துள்ளீர்களா என போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு தொடர்பாக பிரபல ரவுடி சம்போ செந்திலுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article