Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரயில்களில் முன்பதிவு செய்யும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய அப்டேட்!

03:36 PM Oct 17, 2024 IST | Web Editor
Advertisement

ரயில்களில் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட்டை 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யமுடியும் என்ற நடைமுறையை மாற்றி இந்திய ரயில்வே புது அப்டேட் கொடுத்துள்ளது.

Advertisement

ரயில்களில் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட்டை 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் நடைமுறையை இந்திய ரயில்வே பின்பற்றி வருகிறது. இதனால் ரயில் பயணம் செய்வோர் 4 மாதங்களுக்கு முன்பாக தங்களின் பயணத் திட்டத்தை வகுக்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது அதனை 2 மாதங்களாக குறைத்துள்ளது இந்திய ரயில்வே. இதன்மூலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணம் செல்ல விரும்பும் பயணிகள் தங்களின் டிக்கெட்டை இனி 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளமுடியும்.

இந்த டிக்கெட் முன்பதிவு கால மாற்றம் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அதோடு, தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் போன்ற குறிப்பிட்ட பகல் நேர விரைவு ரயில்களுக்கான முன்பதிவில் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகல் நேர ரயில்களுக்கான முன்பதிவு காலம் ஏற்கனவே 60 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு காலம் 365 நாட்கள் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளத.

60 நாட்கள் முன்பாக மட்டுமே முன்பதிவு செய்யக்கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் அதிகளவிலான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தீபாவளி, பொங்கல், தசாரா போன்ற பெரிய பண்டிகை நாட்களில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை மற்றும் சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் தட்கல் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் முன்பதிவை அதிகரிக்க வேண்டும் என்றும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Advance ReservationsCancellationsCommercial CircularForeign Touristsgeneral publicnews7 tamilrailwayreducedTime limitTraintrains
Advertisement
Next Article