Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வீடு கட்டி கொடுத்தாச்சு சந்தோசமா?" என கேட்ட கனிமொழி… "நன்றி அம்மா" என கண்ணீர் மல்க கை கூப்பிய மூதாட்டி! #Thoothukudi-யில் நெகிழ்ச்சி சம்பவம்!

04:22 PM Sep 11, 2024 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடியில் புதுவீடு கட்டி கொடுத்த கனிமொழி எம்.பியை வயதான பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்க கை கூப்பி கும்பிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள மானங்காத்தான் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் நல குடியிருப்புகள் உள்ளன. இதில் 20 வீடுகள் பழுதடைந்த நிலையில், அதற்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தரும் படி தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற கனிமொழி எம்.பி ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்டும் முயற்சியில் இறங்கினார்.

அதன்படி, 20 காலனி வீடுகளை இடித்து, புதிய கான்கீரிட் வீடுகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. முதற்கட்டமாக 9 வீடுகள் ( 4 லட்சம் மதிப்பீட்டில்) கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பயனாளிகளின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்.பி அதனை திறந்து வைத்தார். அப்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உடனிருந்தார்.

இந்த நிலையில் 2ம் கட்டமாக 11 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொகுப்பு கான்கிரீட் வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினர்.

அப்போது ஒரு வயதான பெண்மணியின் வீட்டை திறந்து வைத்த கனிமொழி
எம்.பி. அந்த பெண்மணியிடம் "சந்தோசமா" என்று கேட்டார். இதைக் கேட்ட அந்த பெண்மணி தனது இரு கை கூப்பி கும்பிட்டு "நன்றி அம்மா" என்று கண்ணீர் மல்க கூறினார். அந்த பெண்மணியை தட்டி கொடுத்து ஆறுதல்படுத்திய கனிமொழி அவருடைய குடும்ப நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கயத்தார் வட்டாட்சியர் சுந்தரகிருஷ்ணன், கோவில்பட்டி நகர்
மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாதுரை, மாவட்ட
கவுன்சிலர் பிரியா குருராஜ், தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி
மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags :
DMKKanimozhiKanimozhi Karunanidhinews7 tamilThoothukudi
Advertisement
Next Article