இந்த சீசனுடன் ஓய்வா? - மனம் திறந்த தோனி!
18 ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தோனி தலைமையிலான சென்னை அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து இன்று(மே.25) கடைசி போட்டியில் பங்கேற்றது. அதன்படி குஜராத் அணியுடன் மோதிய சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் முதன் முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்து 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த சில ஐபிஎல் தொடர்களின் போட்டிகளுக்கு இடையில் தோனி ஓய்வு குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவிய வந்தம் இருந்தன. அதே போல் இந்த சீசனும் தோனிக்கு கடைசி சீசன் தான் என தொடக்கத்திலேயே வதந்திகள் உலா வந்தன. இந்த சூழலில் சென்னை அணி தனது கடைசி போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றது.
இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு தனது ஓய்வு குறித்து தோனி மனம் திறந்துள்ளார். இது குறித்து போட்டிக்கு பின் தோனி அளித்த பேட்டியில், “ஓய்வு பெறலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளது. உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய தேவை இல்லை. நான் மீண்டும் வரமாட்டேன் என்றும் கூறவில்லை, மீண்டும் வருவேன் என்றும் கூறவில்லை. ராஞ்சிக்கு சென்று யோசித்து முடிவை எடுக்கலாம்”
இவ்வாறு சென்னை அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.