Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேர்தல் ஆணையத்திடம் ஆட்டோ சின்னம் கேட்கும் நாம் தமிழர் கட்சி?

09:10 AM Mar 18, 2024 IST | Web Editor
Advertisement

நாம் தமிழர் கட்சிக்கு விவசாய சின்னம் கிடைக்காத பட்சத்தில் அக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் ஆட்டோ சின்னத்தை வழங்க கோரிக்கை வைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தை தற்போது அக்கட்சியினர் நாடியுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.  இதனிடையே மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டதால், வரும் 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளதை குறிப்பிட்டு வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிக்கும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை என்றால் ஆட்டோ சின்னம் உறுதியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Election2024Lok Sabha Election2024NTKParliament Election2024SeemanTamilNadu
Advertisement
Next Article