தர்பூசணி சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
07:56 PM May 03, 2024 IST
|
Jeni
Advertisement
தர்பூசணி உண்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
Advertisement
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது. கோடை காலத்தில் தர்பூசணியை எடுத்துக் கொள்வது நல்லது. தர்பூரணி உண்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு காணலாம்.
- அதிக அளவு நீர்ச்சத்தும், மிகுந்த சுவையுடனும் இருக்கும் தர்பூசணி நம் உடலை போதுமான அளவு நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அதனுடன் நம் உடலுக்கு குளிர்ச்சியும் அளிக்கிறது.
- தர்பூசணியில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- தர்பூசணியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
- தர்பூசணி அதிக இனிப்பு சுவையுடன் இருப்பதால் அதில் அதிக சர்க்கரை நிறைந்துள்ளதாக பலரும் எண்ணுகின்றனர். ஆனால் ஒரு முழு தர்பூசணியில் 6.2 கிராமிலிருந்து அதிகபட்சம் 100 கிராம் வரையிலான சர்க்கரை மட்டுமே உள்ளது.
- தர்பூசணியில் அதிக அளவு நீர் சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இதனால், அடிக்கடி பசி எடுப்பதை இது தடுக்கிறது. நீங்கள் சிறிதளவு தர்ப்பூசணியை நொறுக்கு தீனியாக எடுத்துக் கொண்டால், அது நீண்ட நேரத்திற்கு உங்களை பசி இல்லாமல் வைத்திருக்க உதவும்.
- இதில் மிக குறைவான அளவே கலோரி உள்ளது. தர்பூசணியை செரிமானம் செய்வதற்கு நமது உடல் அதிகமான கலோரிகளை எடுத்துக் கொள்வதால், இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- தர்பூசணியில் உள்ள லைகோபீன் நமது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது கொழுப்பைக் குறைத்து ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
- தர்பூசணியை போதுமான அளவு எடுத்துக்கொள்ளும் போது, வயதானவர்களுக்கு உண்டாகும் பார்வை குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
- தர்பூசணியில் நிறைந்துள்ள வைட்டமின் சி நமது ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது ஈறுகளில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
- தர்பூசணி உதடுகள் வறண்டு போவதையும் தடுக்கிறது.
- தர்பூசணியை காலை, மதியம், மாலை நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இரவு நேரங்களில் தர்பூசணி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது சில நேரங்களில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
Next Article