Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“The GOAT” படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் சொன்ன அர்ச்சனா கல்பாத்தி!

07:13 PM Aug 13, 2024 IST | Web Editor
Advertisement

தி கோட் படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார்.

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது.

முன்னதாக, விசில் போடு மற்றும் சின்னச் சின்ன கண்கள் ஆகிய இரண்டு பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். சின்ன சின்ன கண்கள் பாடல் மறைந்த பாடகியும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணியின் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல மெலோடியாக கொண்டாடப்பட்டது. கோட் படத்தின் 3வது பாடல் “ஸ்பார்க்” பாடலின் லிரிக்கல் வீடியோ ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியானது.

தி கோட் திரைப்படம் ஐ மேக்ஸ்,இபிஐக்யூ தொழில்நுட்ப திரைகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சாதாரண திரைகளைவிட ஐமேக்ஸ், இபிஐக்யூ தொழில்நுட்பம் மேம்பட்ட திரைகளில் பார்த்தால் திரைப்படம் நல்ல திரை அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்று (ஆக. 12) படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், தி கோட் படத்தின்  பிரமாண்டமான ட்ரெயிலர் தயாராகிக் கொண்டிருப்பதாகவும், படத்தின் ட்ரெயிலர் குறித்து நாளை அப்டேட் வரும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், ட்ரெயிலர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Archana KalpathiCinema updatesNews7Tamilnews7TamilUpdatesThe GoatThe GOAT in EPIQThe Greatest of All Timevenkat prabhuvijay
Advertisement
Next Article