Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆனந்த் அம்பானி திருமண வரவேற்பில் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல்! - இணையத்தில் வைரலாகும் வீடியோ

12:01 PM Jul 15, 2024 IST | Web Editor
Advertisement

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண வரவேற்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாடகி ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடிய வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது. திருமண கொண்டாட்டங்கள் ஜூலை 12ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றன். இந்தத் திருமண நிகழ்வுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

இதையும் படியுங்கள் : ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு ஏன் ? - தாக்குதல் நடத்திய இளைஞனைப் பற்றி அவரது குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்?

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண வரவேற்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தேசிய விருது பெற்ற பாடகி ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பல வெற்றிப் பாடல்களைப் பாடினர்.

குறிப்பாக, கடந்த 2007ம் ஆண்டு மணி ரத்னம் உருவாக்கி  ஆனந்த் அம்பானியின் மறைந்த தாத்தா திருபாய் அம்பானியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'குரு' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை பாடினர். இது தொடர்பான வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
| radhika merchantAnant Ambaniar rahmanShreya GhoshalsingsTere Binawedding reception
Advertisement
Next Article