Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்-பிரபு தேவா "காம்போ"!

04:49 PM Mar 22, 2024 IST | Web Editor
Advertisement

25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.  இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பிரபுதேவா விஜய்யுடன் இணைந்து ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ‘பகீரா’ படம் வெளியானது. இந்நிலையில், அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேட்ஸ்’ என 90-களில் இந்தக் கூட்டணியில் வெளியான படங்களும், பாடல்களுக்கும் மெகா ஹிட் ஆகின. 1997-ல் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இருவரும் இணைந்து கடைசியாக பணியாற்றியிருந்தனர். தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இப்படத்தில் யோகிபாபு,  மொட்ட ராஜேந்திரன்,  ரெடின் கிங்க்ஸி,  மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 6-வது முறையாக இணைவதை குறிக்கும் வகையில் #ARRPD6 என இப்படத்துக்கு தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் பிரபுதேவாவின் ‘முக்காலா முக்காபுலா’ பாடலின் ஸ்டெப்பும், பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் படமும் இருப்பது போல வடிவமைப்பட்டுள்ளது.

Tags :
Aju Varghesear rahmanarrARRPD6Cinema updatesManoj NSNews7Tamilnews7TamilUpdatesPrabhu devaYogi Babu
Advertisement
Next Article