Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

05:49 PM Mar 17, 2024 IST | Web Editor
Advertisement

முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. 

Advertisement

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அதேப்போல் ஏப்ரல் 26ம் தேதி கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகள் முஸ்லிம்கள் மஸ்ஜித்களில் கட்டாய கூட்டு பிரார்த்தனை செய்யும் ஜும்ஆ நாளான வெள்ளிக்கிழமையாகும். இதனால் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பூத் ஏஜெண்ட் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்களின் பணியும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

ஆகவே, ஒரு தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் முக்கிய பொறுப்பு என்பதால், அனைத்து தரப்பு மக்களும் எளிமையான முறையில் வாக்குகளை செலுத்தும் வகையில் முதல் கட்ட (ஏப்ரல் 19) மற்றும் இரண்டாம் கட்ட (ஏப்ரல் 26) தேர்தல் தேதிகளை மாற்றி அமைக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Election commissionElections2024LokSabha Election2024nellai mubaraksdpi
Advertisement
Next Article