Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தல்: சமுக வலைதளத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி வீடியோ!

01:26 PM Mar 19, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் வீடியோ ஒன்று சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து,  நாளை (மார்ச்.20) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.  27-ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும்.  வருகிற 28-ஆம் தேதி மனு பரிசீலனையும், ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தலும் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள் : தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: 36 மணி நேரத்தை கடந்தும் ஏன் என்று தெரியவில்லை என துணைவேந்தர் விளக்கம்!

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் பழைய விடியோ ஒன்று சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது :

"அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே தயவு செய்து சிந்தித்து வாக்களியுங்கள். வாக்களிப்பது மிக முக்கியம்.  எப்போதும்,  நம் ஊருக்கு ஒரு பிரச்னை,  நம் மாநிலத்துக்குப் பிரச்னை,  என்பவர்களுடன் சேருங்கள்.  நம் சாதிக்கு,  மதத்திற்கு ஒரு பிரச்னை என்பவர்களிடம் ஒருபோதும் சேராதீர்கள்.  அப்படி சொல்பவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருப்பார்கள்.  நாம்தான் மாட்டிக்கொள்வோம்"

இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி அந்த வீடியோ பதிவி தெரிவித்திருந்தார்.

Tags :
Lok sabha Election 2024Social MediaVideoVijay sethupathiViral
Advertisement
Next Article