Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

01:51 PM Dec 19, 2023 IST | Web Editor
Advertisement

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின.

அதிகனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பொதுமக்கள்  வெள்ளநீரில் சிக்கி உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கனமழை பாதிப்பு – தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்!

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருடன் இணைந்து மீட்பு, நிவாரணப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதை ஒருங்கிணைத்து மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
CMOTamilNaduHeavyRainfallheavyrainsKanyakumariRainsMKStalinSouthTNRainsTenkasiRainsThoothukudiTirunelveliRains
Advertisement
Next Article