Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குங்குமம் பூசுவது திருமணமான பெண்களுக்கு 'மதக் கடமை' - இந்தூர் நீதிமன்ற கருத்தால் பரபரப்பு!

04:38 PM Mar 28, 2024 IST | Web Editor
Advertisement

திருமணமான பெண் குங்குமம் பூசுவது மதக்கடமை என இந்தூர் குடும்பநல நீதிமன்றம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

இந்து மதத்தில் திருமணமான பிறகு,  பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் பூசிக்கொள்வார்கள்.   இன்றைய தலைமுறையினர் தங்களின் நவீன கால சவுகரியங்களுக்காக இது போன்ற பழைய பழக்கவழக்கங்களை பின்பற்றுவதில்லை.

ஆனால்,  தனது மனைவி குங்குமம் பூசுவதில்லை என்றும்,  இது இந்து திருமண சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி பவன் யாதவ் என்பவர் இந்தூர் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

ஆனால்,  இது தொடர்பான வழக்கில் ஆஜரான அந்த இளம்பெண்,  வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும்,  போதைப் பழக்கத்துக்கு அடிமையானதாகவும்,  முக்காடு போடுமாறு கூறி மிரட்டுவதாகவும் தனது கணவர் மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்தார்.  கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாகவும் அவர் கூறினார்.

ஆனால்,  திருமணமான பெண் குங்குமம் பூசுவது  'மதக் கடமை'  என கூறிய நீதிபதி, அந்த பெண்ணை அவரது கணவருடன் சேர்ந்து வாழ உத்தரவிட்டது.

Tags :
Indore Family Courtmarriedreligious dutySindoorwife
Advertisement
Next Article