Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! - கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு!

10:24 AM May 06, 2024 IST | Web Editor
Advertisement

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

Advertisement

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது.  இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.  இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் ஏப்ரல் 2ம் தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.  இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியானது.  12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டு மொத்தமாக 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.53% அதிகம்.

அதே போல சிபிஎஸ்சி மாணவர்களுக்கு வருகிற 12-ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.  இதனைத் தொடர்ந்து 2024 – 2025 கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று இளநிலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் http://www.tngasa.in என்ற இணையதளம் மூலம் பெறலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு! 94.56% பேர் தேர்ச்சி!

விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 ஆகும்.  எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை,  பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்த வேண்டும்.

Tags :
AdmissionCollege Education Directorategoverment collegegovernment arts and science collegestudentsTamilNadu
Advertisement
Next Article