Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஏஐ தொழில்நுட்ப வசதியுடன் #iPhone16model-கள் அறிமுகம்!

03:08 PM Sep 10, 2024 IST | Web Editor
Advertisement

நவீன ஏஐ தொழில்நுட்பத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 16 மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

ஐஓஎஸ் 18 இயங்குதளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஐஃபோன் 16 மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள், முந்தைய ஐஃபோன் மாடல்களைவிட மேம்பட்ட கேமரா, தொடுதிரை மற்றும் ஒலித்தரத்தை கொண்டுள்ளன. நவீன ஆப்பிள் இண்டலிஜன்ஸ் தொழில்நுட்பம் புது மாடல் ஐஃபோன்களில் கூடுதல் சிறப்பாக உள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐஃபோன் மாடல்கள் விலைப் பட்டியல் மற்றும் அம்சங்கள்:

ஐஃபோன் 16 ப்ரோ மேக்ஸ் : விலை - ரூ. 1,44,900

தொடுதிரை அளவு - 6.9 இன்ச்

ஐஃபோன் 16 ப்ரோ : விலை - ரூ. 1,19,900

தொடுதிரை அளவு - 6.3 இன்ச்

இவ்விரண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் ஏ18 ப்ரோ சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக மிகச் சிறந்த தொடுதிரைகளைப் பெற்றுள்ளதும் கூடுதல் சிறப்பம்சம். மிக வேகமான குவாட் பிக்சல் சென்சார் பொருத்தப்பட்டுள்ள, 48 எம்பி ஃபியூசன் கேமரா இந்த ஐஃபோன்களில் உள்ளது. இந்த கேமராவில், 4கே - விநாடிக்கு 120 பிரேம்(120 எஃப்பிஎஸ்) தரத்தில் விடியோ பதிவு செயயலாம். இந்த ஐஃபோன்கள் 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி சேமிப்பு தரத்துடன் விற்பனைக்கு வரவுள்ளன. இவ்விரண்டு ஸ்மார்ட்ஃபோன் மாடல்களும் செப். 20 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளன. செப்டம்பர் 13ம் தேதி முதல் இதற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : சீனாவில் கால்பதித்த அதானி குழுமம்… #Congress கண்டனம்!

ஐஃபோன் 16 : விலை - ரூ. 79,900

ஐஃபோன் 16 ப்ளஸ் : விலை - ரூ. 89,900

இவ்விரண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் ஏ18 சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரக ஐஃபோன்கள் விளையாட்டுகளுக்கு 30 சதவிகிதம் மேம்பட்ட திறனை வழங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களைவிட அதிக திறன் வாய்ந்த பேட்டரியுடன் இந்த ஐஃபோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதும் கூடுதல் சிறப்பம்சம்.

ஆப்பிள் வாட்ச் 10 மாடல்கள் : விலை - ரூ. 46,900

முந்தைய ஆப்பிள் வாட்ச் மாடல்களைவிட 10 சதவிகிதம் மெல்லியதாய் வமைக்கப்பட்டுள்ளதும், இதுவரை வெளியான ஆப்பிள் வாட்ச் மாடல்களில், இதுவே அதிவேகமாக சார்ஜ் ஏறும் திறன் பெற்றிருப்பதும் கூடுதல் சிறப்பம்சம். 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 80 சதவிகிதம் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும் என்று ஆப்பிள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்த ஓ-எல்இடி தொடுதிரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் 10 மாடல்கள் செப். 20 முதல் விற்பனைக்கு வர உள்ளன. ஏர் பாட் 4 மாடல்கள் விலை - ரூ. 12,900 இவை செப்டம்பர் 20ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளன.

Tags :
AI TechnologyappleiPhone 16 modellaunchedNews7Tamilnews7TamilUpdatessmartphones
Advertisement
Next Article