மைக்ரோமேக்ஸ் லோகோ பொறிக்கப்பட்ட ஆப்பிள் ஏர்பாட் - இணையத்தில் வைரல்!
23 வயதான நபர் ஒருவர் ஆப்பிள் ஏர்பாட்களில் ஃபிஸ்ட் பம்ப் இமோஜி பொறிக்கப்பட்டிருப்பதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வேகாமாக பரவி வருகிறது.
இந்தியாவில் தொலைபேசி பறிப்பு குறித்த சமூக ஊடக விவாதத்தின் போது, எக்ஸ் பயனர் ஒருவர் திருட்டைத் தடுக்க தனது ஆப்பிள் ஏர்பாட்களில் மைக்ரோமேக்ஸ் லோகோவுடன் பொறிக்கப்பட்டதாகக் கூறினார். தனது ஏர்பாட்களில் ஃபிஸ்ட் பம்ப் (ஒரு நபர் மற்றொருவருடன் முட்டிகளை முட்டிக்கொள்ளும் சைகை) இமோஜியைப் பொறித்ததாகக் கூறினார். இதனால் திருடர்கள் அதனை ஆப்பிள் தயாரிப்பு என்று உடனடியாக அடையாளம் காணமுடியாது.
23 வயதான இவர், மைக்ரோமேக்ஸ் லோகோவை ஒத்திருப்பதால் ஃபிஸ்ட் பம்ப் எமோஜியை பொறிக்க அவர் தேர்வு செய்ததாக கூறினார். இது குறித்து அவர் கூறும்போது, "நான் இந்த ஏர்பாட்களை வாங்கியபோது என்.சி.ஆரில் வசித்து வந்தேன். எனது நண்பர்கள் பலரின் சாதனங்கள் அங்கு திருடப்பட்டன. பட்டப்பகலில் பைக்கில் வந்த நபர்கள் மற்றவர்களின் செல்போனை பறித்தை நான் ஒரு முறை பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக இதுவரை என்னிடம் இருந்து எதுவும் திருடப்படவில்லை" என்றார்.
அவர் ஏர்பாட்களின் படத்தை பகிர்ந்து, "எனது ஏர்பாட்களில் ஃபிஸ்ட் பம்ப் இமோஜியை பொறித்தேன். இதனால் அது மைக்ரோமேக்ஸ் என குழப்பமடைந்து திருடப்படமாட்டாது" என குறிப்பிட்டார். அவரது இடுகை 2,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. இதற்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.