Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து - 12 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
06:54 AM Aug 28, 2025 IST | Web Editor
மகாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கட்டிட விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறி நிகழ்ந்துள்ளது. இதனிடையே மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் 4 அடுக்கு மாடிகளை கொண்ட குடியிருப்பு அமைந்துள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 50 வீடுகள் உள்ளது.

Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து, அருகிலுள்ள காலியான குடியிருப்பின் மீது விழுந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
apartmentbuilding collapsesIndiaMaharashtra
Advertisement
Next Article