Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக் டவுன்’ பட ரிலீஸ் ஒத்திவைப்பு!

அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக் டவுன்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
10:06 AM Dec 04, 2025 IST | Web Editor
அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக் டவுன்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement

கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த அனுபமா பரமேஸ்வரன், தனது 19 வயதில் ‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அந்தப் படத்தில் ‘மேரி’யாக அவர் நடித்த கேரக்டர் சிறியதாக இருந்தாலும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படத்தின் மூலம் அவருக்கு புதிய வாய்ப்புக்ளும் கிடைத்தன. அந்த வகையில், அவர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தார். தொடர்ந்து, டிராகன், பைசன் காளமாடன் ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

Advertisement

இதனிடையே, நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘லாக் டவுன்’. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்துள்ளார்.

https://x.com/LycaProductions/status/1996193248990400690

இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர் மழை உள்ளிட்ட வானிலை சூழல்கள் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், ரசிகர்கள், திரையரங்கு ஊழியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளதாக படக்குழு விளக்கமளித்துள்ளது.

Tags :
Anupama ParameswarancinemaHeavy rainlock downmovie updaterelease date
Advertisement
Next Article